தண்ணீர் தேசம் [Thanneer Desam] (1997) - Plot & Excerpts
தண்ணீர் தேசம்!! அண்மையில் வாசித்து வியந்த புத்தகமே கவிஞர் வைரமுத்துவின் தண்ணீர் தேசம். இது நான் வாசித்த இரண்டாவது வைரமுத்துவின் புத்தகம் .மூன்று நாட்களில் பூமியில் இருந்து கொண்டே கடல் பயணம் சென்று வந்த நினைவு!அந்த தேசம் உவமைகளின் தேசம் கற்பனை நதிகள் பல கலந்த தேசம் வாழ்க்கையின் நியாய அநியாயங்களை வேரறுத்த தேசம் ஆக்சிஜெனுடன் நம்பிக்கையையும்சுவாசித்தால் மரணத்தையும் வென்று விடலாம் என பாடம் நடத்திய தேசம்அனைவரும் வாழ்வதற்காக ஓரமாக ஒதுங்கி வாழும் ஒதுக்கப்பட்டு வாழும் ஒராயிரம் கோடி கடலோர மக்களின் வாழ்க்கை பிரதிபலிபிற்கான தேசம் காதல்-தசை நேசமல்ல !! உயிர் நேசம் என்பதை உணர்த்தும் உறவுகளின் தேசம் நட்புக்கு 100 சதவிகித அர்த்தம் சொல்லும் நேசங்கள் வாழ்ந்த தேசம் பல அறியாத அறிவியல் புதிர்களை அழகிய தமிழில் மொழி பெயர்த்த தேசம் வைரமுத்து அவர்களின் ஒரு வித்தியாசமான நாவல் கவிதை நடையில் ஒரு நாவல். இது போன்று கவிதை நடையில் ஒரு நாவலும் படித்ததில்லை. விஞ்ஞானம்,காதல்,மனித உணர்வுகள், சமுகம் என அனைத்தும் எழுதமுடிகிறது வைரமுத்துவால். நாவலில் வரும் ஒவ்வொரு வரியும் அழகானவை. "தன்மேல் விழும் மண்ணைச் சோதனை என்று சொன்னதுண்டா விதை?" "இயற்கை தாலாட்டினால் இந்தக் கடல் இவர்களுக்குத் - தொட்டில், இயற்கை தள்ளிவிட்டால் இந்த கடல் - கல்லறை" "வாழ்வைக் கற்பனை செய். சாவைக் கற்பனை செய்யாதே..." "உழைக்காதவன் கையில் தங்கமும் அழுக்கு. உழைப்பவன் கையில் அழுக்கும் தங்கம்."என இன்னும் பல வரிகள் உள்ளன.சிறுது செயற்கையாக இருந்தாலும் அவை படிக்கும்போது பெரிதாக தெரிவதில்லை... P.S: கலைவண்ணன் படகில் பாடும் பாடல் வரிகள், A.R. Rahman இசையில் கடல் படத்தில் வரும். அந்த பாடல் "சித்திரை நிலா "நாவலில் வரும் வரிகள் மனிதன் நினைத்தால் வழி பிறக்கும்மனதில் இருந்து ஒளி பிறக்கும்புதைக்கின்ற விதையும்முயற்சி கொண்டால் தான்பூமியும் கூட தாழ் திறக்கும்கண்களில் இருந்தே காட்சிகள் தோன்றும்கலங்களில் இருந்தே தேசங்கள் தோன்றும்துயரத்தில் இருந்தே காவியம் தோன்றும்தோல்வியில் இருந்தே ஞானங்கள் தோன்றும்சூரியன் மறைந்தால் விளக்கொன்று சிரிக்கும்தோனிகள் கவிழ்ந்தால் கிளை ஒன்று கிடைக்கும்மரம் ஒன்று விழுந்தால் மறுபடி தலைக்கும்மனம் இன்று விழுந்தால் யார் சொல்லி நடக்கும்பூமியை திறந்தால் புதையலும் இருக்கும்பூக்களை திறந்தால் தேன் துளி இருக்கும்(மரம் ஒன்று)நதிகளை திறந்தால் கலனிகள் செலிக்கும்நாளையை திறந்தால் நம்பிகை சிரிக்கும்நதிகளை திறந்தால் கலனிகள் செலிக்கும்நாளையை திறந்தால் நம்பிகை சிரிக்கு."
What do You think about தண்ணீர் தேசம் [Thanneer Desam] (1997)?
Excellent. the author has experienced the oceans and you experience the oceans in this work.
—Gabby
A perfect blend of Survival science and human emotion with Tamil poetry.
—Emmie