கள்ளிக்காட்டு இதிகாசம்! - கண நேரம் கூட சந்தோசம் என்று ஒன்று எட்டி பாக்கத ஒரு மாமனிதரின் கதை !!என்னுள் மீள முடியாத ஒரு ஏக்கத்தை ஏற்படுத்திய ஒரு புத்தகம் ! கதையில் பெரிய ட்விஸ்ட் எதுவும் இல்லை ! அரிவாளோடு திரியும் வில்லன் இல்லை ! ஆனாலும் படிப்பவருக்குள் ஒரு பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு படைப்பு ! பேயாத்தேவர் - விதி இவரின் வாழ்க்கையில் எப்படி எல்லாம் சதி செய்கின்றது என்பது தான் கதைக்களம் !! அழகம்மாள் இறந்த செய்தி கேட்டு பேயாத்தேவரை நான் மிகவும் கலங்கிவிட்டேன் !!மனைவியின் அருமையை சொல்லிப் புலம்பும் பகுதி நெஞ்சை வருடுகிறது!!இறுதி அத்தியாயத்தை படித்த பொழுது என்னை அறியாமல் கண்களில் நீர் ! ஒவ்வொரு சிறிய விஷயங்களை கூட எவவளவு அழகாக வர்ணித்திருக்கிறார் ! புத்தகம் படித்தது போன்ற ஒரு உணர்வே இல்லை ! கள்லிகாட்டில் வாழ்ந்தது போன்று இருந்தது ! ஆண்டவனும் , அரசாங்கமும் கைவிட்ட காட்டுல உழைப்பையும் , வைராக்கியத்தையும் நம்பி வாழ்ற ஒரு பெரிய மனுசனோட கத. பெத்ததுகளுக்கு உழைச்சே வத்தலாப்போன "பேயத்தேவர்" பத்துன கத .வாழ்க்கையோட கடைசி காலம் வர மண்ணுகூடையும் மனுசன்கூடையும் முட்டி முட்டி மூகருந்து போனவரு கத . இதை படிக்கும் போதும் , முடிக்கும் போதும் கண்ணீருடன் , கனத்த மனதுடனும் தவித்தேன். மிகப்பிடித்த வசனங்களில் ஒன்று :" அரசாங்கத்துக்கு வாய்தான் இருக்கு காது இல்ல "
I like this book very much and this author Thiru.Vairamuthu Avl also.
—cherry23
i want to read kallikattu ithigasam by vairamuthu
—princess
Amazing.................
—eleni
good story
—fran
good
—Devon