Share for friends:

Read Parva (2009)

Parva (2009)

Online Book

Author
Genre
Rating
4.49 of 5 Votes: 2
Your rating
ISBN
0948724455 (ISBN13: 9780948724459)
Language
English
Publisher
Sahitya Akademi

Parva (2009) - Plot & Excerpts

It deserve 5 stars. Such realistic way of retelling Mahabharata epic. I feel this is more genuine than the figurative and original Mahabharata. Parva is a way of showing how to live the life, with all the dilemmas, and complex Dharma. It also enables one to judge the roles of all Mahabharata roles since they are all humans, and they are fallible, rather than assuming them to godly beings. Must for modern Indians looking something new in the Epics. மகாபாரதம் நாம் அனைவரும் கேட்ட கதை தான் , இந்த மண்ணில் வாழும் அனைவரும் ஒரு முறையாவது கேட்டு இருப்பார்கள் , இன்று மகாபாரதம் ஒரு புராண கதையாக நமக்கு கிடைகிறது . கடவுள்கள் , வரங்கள் , சாபங்கள் நிறைந்தது இந்த புராணம் . கண்டிப்பாக காலம் தோறும் மகாபாரதம் மாறி வந்து இருக்கும் . புது புது கிளை கதைகள் இணைந்து இருக்கும் , காலத்துக்கு ஏற்ற மாற்றங்கள் நிகழ்ந்து இருக்கும் .மகாபாரதத்தின் காலம் எனபது இந்தியா ஒரு பழங்குடி சமூகத்தில் இருந்து மேல் எழுந்து ஒரு நில உடமை சமூகமாக மாறும் கால கட்டம் . பெரும் அரசர்கள் உருவாகும் ஒரு காலத்தை காட்டுகிறது . அதற்கே உண்டான அற விழிமியங்களை பற்றி பேசுகிறது . பெரும் தெய்வங்களான சிவனும் விஷ்ணுவும் உருவாக தொடங்கி உள்ள காலமாகவே பார்க்க முடிகிறது . ரிக் வேத காலத்தில் அக்னியும் , இந்திரனும் தான் பெரும் தெய்வங்கள் . விஷ்ணு என்று நாம் இன்று அறியும் கடவுள் மூன்று தனி நம்பிக்கைகள் உள்ளிழுத்து கொண்டு உருவானது . எஸ் . எள் ப்ய்ரப்பா இந்த மகாபாரத கதையை அதன் புனித தன்மையை கலைத்து விட்டு ஒரு வரலாற்று நிகழ்வாக , ஒரு நாவலாக எழுதி இருக்கிறார் .பருவா என்று கன்னடத்தில் வெளியான இந்த புகழ் பெற்ற நாவல் தமிழில் பருவம் என்று பாவண்ணன் அவர்காளால் மொழி பெயர்க்க பட்டுள்ள ஒரு மாபெரும் நாவல் .கதை தொடங்கும் காலம் மகாபாரத யுத்தம் நிகழ உள்ளது . அதற்க்கான தயாரிப்பு ஏற்பாடுகளில் பாண்டவர்களும் , கௌரவர்களும் இருக்கிறார்கள் . முக்கியாமான கதை மாந்தர்கள் குந்தி , பீமன் , திரௌபதி , அர்ஜுனன் , யுயதனன் , பீஷ்மர் , துரோணர் போன்றவர்களின் என்ன ஓட்டங்களால் முன்னகர்கிறது .நாவல் நாம் மரபாக அறிந்துள்ள தகவல்களை மறு அமைப்பு செய்கிறது. உதாரணமாக பாண்டுக்கு குழந்தை இல்லாததற்கு காரணம் அவன் ஆண்மையை இழந்தது தான் அன்றி முனிவரின் சாபம் இல்லை . குந்தி வரம் வாங்கி குழந்தை பெற்று கொள்ள வில்லை , நியோக முறையில் இன்னொரு ஆணுடன் உறவு கொண்டே பிள்ளைகள் பெற்று எடுக்கிறாள் . குந்திக்கு நியோகம் செய்யும் ஆண்கள் தேவர் லோகம் என்னும் ஒரு பகுதியை சேர்ந்தவர்கள் வானத்தில் இருந்து வரும் தேவர்கள் அல்ல . இதை போல் நாம் தெரிந்த தகவல்களை மறு புரிதலுக்கு உண்டாக்கும் இந்த நாவல் .திரௌபதி எப்படி ஐந்து ஆண்களை மணந்து கொண்டால் , அவள் எப்படி அவர்களுடன் உறவு கொண்டால் போன்று விஷயங்களை புனைவின் சாத்தியங்களுடன் எழுதி உள்ளார் . இந்த நாவல் நடைமுறை எதார்த்தத்தை பற்றி பேசும் இடங்கள் பெரும் நம்பக தன்மையுடன் எழுத பட்டுள்ளது .கதையின் கதாபாத்திரத்தின் உளவியல் அமைப்பை விவரிக்கும் இடங்களில் , அவர்கள் நமக்கு நெருங்கிவிடுகிரார்கள் . பீமன் தர்மன் பகடை விளையாடியதை கடுமையாக கண்டிக்கிறான் . அவன் வாயிலாக நமக்கு கதை விவரிக்க படும் போது நாமும் அந்த கோபத்தை உணர்கிறோம் . பிறகு அதை அர்ஜுனன் அவன் தரப்பு நியாயங்களுடன் விளக்குகிறான் . இப்படியே பலரின் வாக்குமுலமாக கதை நகர்கிறது . அவர் அவரின் மனசாட்சி பேசும் நியாயங்கள் .யுத்தம் முடியும் பகுதி ஒரு மிக பெரிய உணர்ச்சி பிரளயம் வெடிக்கிறது எல்லோர் மனங்களிலும் .எங்கு பார்த்தாலும் பிணங்களை திங்கும் கழுகுகள் , ஓநாய்கள் , உடைந்து போன தேர்கள் , குதிரைகளின் சடலம் என எங்கு பார்த்தாலும் அழிவின் கோர முகங்கள் . இப்படி ஒரு அழிவை யாரும் பார்த்ததில்லை . கதை முடியும் தருணத்தில் கண்ணன் காந்தாரியை கண்களின் கட்டை அவிழ்த்து விடுகிறான் . அவளை கூட்டி கொண்டு யுத்த களத்துக்கு கூட்டி செல்கிறான் அவள் எதை பார்க்கிறாள் தன் மகன்கள் உருவாகிய அழிவை பார்த்து அஞ்சுகிராளா அவள் ? ஏன் மறுபடியும் கண்களை மூடி கொள்கிறாள் . நாவலின் முடிவில் மிக பெரிய ஒரு தனிமை உணர்வை கொண்டேன் . பாஞ்சாலியின் ஐந்து மகன்களும் கொல்லபடுகிறார்கள் . அதை பார்த்து பாஞ்சாலி கதறும் போது இந்த யுத்தத்தால் அதிகம் பாதிக்க பட்டவர்கள் பெண்கள் தானோ . அதன் வடுக்களை சுமந்து இந்த பூமி எனும் பெண்ணும் காலத்தில் முன்னகர்கிறாள் . ஒரு பெரும் மழை அச்தினாவதியை அதன் அசுதங்களில் இருந்து சுத்தம் செய்கிறது . மனிதனின் குரூரத்தின் சாட்சியாக அந்த யுத்தம் காலம் தோறும் மனிதர்களால் சொள்ளபட்டுவருகிறது .

What do You think about Parva (2009)?

The Mahabharatha brought to the most humane level possible.
—scooter

Changed my perspective of looking at mythology
—nawal

my all time favourite book
—Emmlar

READ... FOR AROUND VIEW...
—Riley

Write Review

(Review will shown on site after approval)

Read books by author S.L. Bhyrappa

Read books in category Fantasy